முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

‘ரோபோ’ பாதிரியார்

‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கிய நிலையில், ஜெர் மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் பணி யில்  ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குவது கூடுதல் அம்சம்.ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்டின் 500-ம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில் இந்த ‘ரோபோ’ பாதிரியார் நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கு ‘பிளஸ்யூ -2’ என பெயர். இதில் தொடுதிரையுடன் கூடிய பெட்டி, 2 கைகள் மற்றும் 2 கண்களுடன் தலை, டிஜிட்டல் வாயும் உள்ளது. பக்தர்களை இது ஆண் மற்றும் பெண் குரலில் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும் தனது 2 கைகளை உயர்த்தி அவர்கள் விரும்பும் மொழியில் ஆசி வழங்குகிறது.

அளவாக பயன்படுத்த

அமெரிக்காவின் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது.

ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதே போல கம்போடியா நாட்டில் கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கிறது.

அறிகுறிகள்

ஒருவருக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், அசிடிட்டி, வயிற்று அல்சர், மலச்சிக்கல், குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை காரணங்களாக அமைகின்றன. இவை தீவிரமாக இருந்தால், அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.

சீனாவில் மம்மி கண்டுபிடிப்பு

மம்மி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது எகிப்தும், அதன் பிரமிடுகளும்தான். அங்குதான் பண்டைய காலங்களில் உடலை பதப்படுத்தி மம்மிக்களாக பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சீனாவிலும் மம்மிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் சீனாவின் தைஜோவில் சாலை தொழிலாளர்கள் ஒரு சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபொழுது வித்தியாசமான ஒன்றை கண்டார்கள். உடனே தொல்பொருள் ஆய்வாளர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அகழ்வாராய்ச்சி செய்து பாக்க அவர்களுக்கு கிடைத்தது சவப்பெட்டியுடன் கூடிய ஒரு சிறிய கல்லறை. உள்ளே கிட்டத்தட்ட சரியாக பாதுகாக்கப்பட்ட சீன மம்மி ஒன்று இருந்தது. அப்படி அரிதான கலைப்பொக்கிஷமான சீன மம்மியை சாலை தொழிலாளர்கள்தான் கண்டுபிடிச்சிருக்காங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் சாதனை

1984 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் Uwe Hohn என்பவர் தான் அதிகபட்ச தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அவர் எறிந்த தூரம் எவ்வளவு தெரியுமா 104.80 மீட்டர். அதற்கு முந்தைய சாதனை அமெரிக்காவைச் சேர்ந்த டாம் பெட்ரானோவ் ஈட்டி எறிந்த தூரம் 99.72. ஈட்டி எறிதலில் இதுவரை Uwe Hohn சாதனைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்