முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

மிகவும் பழமையானது

பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று கிடைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான இந்த தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நீண்ட தொலைவு பறக்கும் பறவை இனம் எது தெரியுமா?

றவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.

பெண் மருத்துவர்

தமிழகத்தில் ஆண்கள் மட்டுமே படித்து வந்த மருத்துக்கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மருத்துவ மாணவி என்ற சாதனை படைத்தவர் முத்துலட்சுமி ரெட்டி.சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்க நிதி திரட்டியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா

இன்றைக்கு நவ நாகரிக நங்கைகளின் பிரத்யேகமான பேஷன் பொருளாக இருப்பது லிப்ஸ்டிக். ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப விதவிதமான லிப்ஸ்டிக்குகளை இன்றைய டீன்ஸ்கள் தங்களது ஹேண் பேக்கிலேயே வைத்து செல்லும் காலமாகி விட்டது. அனைவரும் நினைப்பது போல இது மேல் நாட்டு நாகரிகம் அல்ல. லிப்ஸ்டிக்கை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திலேயே லிப்ஸ்டிக் பயன்பாடு குறித்த பதிவுகள் உள்ளன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாப், ராஜஸ்தான் பெண்டிர் மணமகனை அலங்கரிக்க விதவிதமான இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிந்தும் தெரியாதது

சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவர் படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்த இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony