முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலக சாதனை

டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.

மறதி நகரம்

பெங்களுருவில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாக தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் தெவிக்கின்றன. செல்போனுக்கு இந்த பட்டியலில் முதலிடம்.

பெண் மருத்துவர்

தமிழகத்தில் ஆண்கள் மட்டுமே படித்து வந்த மருத்துக்கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மருத்துவ மாணவி என்ற சாதனை படைத்தவர் முத்துலட்சுமி ரெட்டி.சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்க நிதி திரட்டியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு முதலிடம்

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர். இதில், இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. கனடா, இத்தாலியிலும் இதேநிலைதான்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

பச்சையாக சாப்பிடவும்

விட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கொழுப்புகள் இல்லாததால்,  ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்