எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
உருளைக்கிழங்கு சீஸ் பால்
Cooking time in minutes:
20
Ingredients:
உருளைக்கிழங்கு சீஸ் பால் செய்யத்தேவையான பொருட்கள்.
- நறுக்கிய உருளைக்கிழங்கு - 3/4 கிலோ.
- சீஸ் - 200 கிராம்.
- முட்டை - 5.
- பிரட் கிரம்ஸ் - ஒரு கப்.
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
- கான் பிளவர் மாவு - 100 கிராம்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய 1/4 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பை போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- 5 நிமிடங்கள் கழித்து வேக வைத்த உருளைக்கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் 200 கிராம் சீஸை எடுத்து அதை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்றாக கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் ஒரு கப் பிரட் கிரம்ஸ் எடுத்து கொள்ளவும்.
- இதனுடன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 100 கிராம் கான் பிளவர் மாவை எடுத்து கொள்ளவும். மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சிறிதளவு எடுத்து பிளவர் மாவில் பிரட்டி எடுத்து பின்னர் மாவின் நடுவில் ஒரு சீஸ் துண்டை வைத்து லட்டு உருட்டுவது போல் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள உருளைக்கிழங்கையும் உருட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- உருட்டி வைத்த உருண்டைகளை கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு உருண்டையின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி உருட்டி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஓவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
- சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


