எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜேவியர் பார்டெம் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதை அறிவித்தார்கள். நார்வே நாட்டில் உருவாக்கப்பட்ட சென்டிமென்டல் வேல்யூ என்ற திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
ஈரான் - இஸ்ரேல் போருக்கு மத்தியில் இந்த ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஜனவரியில் நாமினேஷன் செய்யப்பட இருந்த விருதுகள் கலிஃபோர்னியா காட்டுத்தீயினால் தேதி மாற்றப்பட்டது. ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த ஜேவியர் பார்டெம் முன்னதாக, “இஸ்ரேல் 4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக காஸாவில் இனப்படுகொலையை நடத்திவருகிறது” எனக் கூறியிருந்தார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் தனது சட்டையில் பின் பேட்ஜ் ஒன்றைக் குத்தியிருந்தார். ஆஸ்கர் மேடையில் ஜேவியர் பார்டெம் பேசியதாவது: நான் இந்த பின் பேட்ஜை 2003ல் இராக் போரின்போது குத்தியிருந்தேன். தற்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சட்ட விரோதமான போரை ஒரு பொய்யினால் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
ஜேவியர் பார்டெம் நடித்த எஃப்1 படத்துக்கு சிறந்த சப்தத்திற்கான விருது வழங்கப்பட்டது. இதுவரை, 72,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


