முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்த முறை 5 மாநிலங்களிலும் குறைந்த கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதுடன், வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி விடப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி உள்ளன. அதிலும் குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் முதல் மற்றும் 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கு இடையே அதிக இடைவெளி வைக்கப்பட்டிருப்பது குறித்து சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது:-வாக்காளர்களுக்கு வசதியாக இருக்கும் விதத்தில் தேர்தல் கட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 5 மாநிலங்களிலும் குறைந்த கட்டங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும், ஏதேனும் வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, அல் லது வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் சில வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வசதியாகவும், அனைத்து வாக்குகளையும் ஒரே நேரத்தில் எண்ணுவதற்கும் கடைசி வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 5 நாட்கள் இடைவெளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து