முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தி.மு.க. சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு சாா்பில் ரமலான் நோன்பு துறப்பு விழா சென்னை, அமைந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: தி.மு.க.வுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையேயான உறவு, இக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே தொடா்ந்து வருகிறது. இஸ்லாமியா்களுக்காக பல நலத்திட்டங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்தாா். அவரது வழியில் இந்த அரசு சிறுபான்மையினருக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான். மகளிா் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஜமாஅத் மாநாட்டில் நான் பேசும்போது, முஸ்லிம் பெண்கள்தான் அதிகமாகக் கை தட்டி அதை வரவேற்றாா்கள். பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும்.

அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் இங்கே ஒரே மேடையில் சோ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம். ஏன் இந்தியாவுக்கும் அவசியம். ஆனால், இதற்கு நோ்மாறான நிலைமை, பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவா்கள்கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பாா்க்காமல் தாக்குதலை நடத்துகின்றனா்.

இப்படி நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை பற்றி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி ஏதாவது கருத்து சொன்னாரா? அதி.மு.க.வுடன் சோ்த்து, அவரது மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டாா். பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதி.மு.க., எப்படி சிறுபான்மையினரின் உரிமையையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும்?

இஸ்லாமியா்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவா்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிா்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியா்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுப்பது தி.மு.க.தான். தொடா்ந்து களத்தில் இறங்கி போராடுகிறோம். அதனால்தான், சிறுபான்மையின மக்களும் தி.மு.க.வுக்கு துணையாக நிற்கிறாா்கள் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

 

இந்நிகழ்வில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு. நாசா், மக்களவை உறுப்பினா்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ், சிறுபான்மை மாநில ஆணைய முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து