எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம் வென்றுள்ளது.
இந்திய நேரடிப்படி, திங்கள்கிழமை காலை 4.30 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், 98-வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. விழாவில், 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஒன் பேட்டில் ஆஃப்டர் ஆனதர் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று, ஆஸ்கர் விருதுகள் விழாவில் இந்த திரைப்படக் குழுவினர் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தனர்.
1. சிறந்த திரைப்படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்.
2. சிறந்த இயக்குநர் : பால் தாமஸ் ஆண்டர்சன்.
3. சிறந்த துணை நடிகர்: சீன் பென்.
4. சிறந்த தழுவல் திரைக்கதை : பால் தாமஸ் ஆண்டர்சன்.
5. சிறந்த காஸ்டிங் - முதல் முறையாக அறிமுகம்): கசாண்ட்ரா குலுகுண்டிஸ்.
6. சிறந்த திரைப்படத் தொகுப்பு (வார்னர் பிரதர்ஸ்) ஆன்டி ஜர்கென்சென்.
ஆகிய ஆறு விருதுகளைக் குவித்திருக்கிறது.
வெற்றியாளர்கள் முழு விவரம் வருமாறு., இந்த விழாவில், உலகளவில் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள், நடிகர், நடிகைகளுக்கு துறைவாரியாக ஆஸ்கர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
2026-ஆண்டின் ஆஸ்கர் விருது வெற்றியாளர்கள் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. 1. சிறந்த நடிகர் : மைக்கேல் பி. ஜோர்டான், 2. சிறந்த நடிகை: ஜெஸ்ஸி பக்லி, 3. சிறந்த துணை நடிகை: அமி மடிகன். 4. சிறந்த அசல் திரைக்கதை: ரையன் கூக்ளர் (ரையன் கூக்ளர் பெறும் முதல் ஆஸ்கர் விருது).
முதல் பெண் ஒளிப்பதிவாளர்
முதல்முறையாக ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருது வென்றது திரைத்துறையில் பேசுபொருளாகியுள்ளது. ரையன் கூக்லர் இயக்கிய சின்னர்ஸ் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ் ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருதை முதல்முறையாக பெற்று அசத்தியுள்ளார். அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் பிறந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ், ஒளிப்பதிவிற்கான பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார். முதல்முறையாக 2013ல் வெளியான பாலோ ஆல்டோ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். ரையன் கூக்ளரின் பிளாக் பாந்தர் படத்துக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்ற விரும்பினாலும் சின்னர்ஸ் மாதிரியான கதைகள் கிடைத்தால் மட்டுமே பணியாற்றுவேன் என நேர்காணல் ஒன்றில் அர்க்காபாவ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


