Idhayam Matrimony

அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
Udayanidhi-1 2024-11-17

சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில், டவுட்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் சிறந்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். மத்திய அரசு உரிய நிதியை வழங்காத நிலையிலும், மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் தி.மு.க.வுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றனா்.

தோ்தல் நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருகிறாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை. இந்தச் சூழலில், தி.மு.க.வின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஓய்வின்றி உழைத்து தி.மு.க. கூட்டணி வெற்றி பெறச் செய்வதற்கு கட்சியினா் ஒவ்வொருவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து