எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
உருளைக்கிழங்கு லாலிபாப்
Cooking time in minutes:
20
Ingredients:
உருளைக்கிழங்கு லாலிபாப் செய்யத் தேவையான பொருட்கள்.
- உருளைக்கிழங்கு - 5.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை – சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
- சாட் மசாலா - ஒரு ஸ்பூன்.
- மிளகு தூள் - கால் ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்.
- சீரகம் - ஒரு ஸ்பூன்.
- எலுமிச்சம் பழச் சாறு - 2 ஸ்பூன்.
- மைதா மாவு – 6 ஸ்பூன்
- பிரட் கிராம்ஸ் – சிறிதளவு.
- கார்ன் பிளவர் மாவு - 3 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் 5 வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து துருவி வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலை,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு ஸ்பூன் சாட் மசாலா,மிளகு தூள் கால் ஸ்பூன்,2 ஸ்பூன் மிளகாய் தூள்,1/2 ஸ்பூன் சீரகத்தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்,உப்பு தேவையான அளவு,2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது,ஒரு ஸ்பூன் சீரகம்,2 ஸ்பூன் எலுமிச்சம் பழச் சாறு மற்றும் 1/2 கப் பிரட் கிராம்ஸ் போட்டு இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- இந்த கலவையில் சிறிதளவு எடுத்து லட்டு உருட்டுவது போல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்,இதை போல் எல்லா உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் சிறிதளவு பிரட் கிராம்ஸ்சை எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 5 ஸ்பூன் மைதா மாவு,3 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு,தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதாமாவு மற்றும் கார்ன் பிளவர் மாவு கரைசலில் போட்டு முக்கி எடுத்து பின்னர் பிரட் கிராம்சில் பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள உருண்டைகளையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பிரட் கிராம்சில் பிரட்டி எடுத்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இதே போல் மீதம் உள்ள உருண்டைகளையும் போட்டு பொரிக்கவும்.
- பொரித்த உருண்டைகளில் குத்தக்கூடிய குச்சிகளை குத்தி வைத்துக்கொள்ளவும்.
- சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


