முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கத்திரிக்காய் கோசுமல்லி

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

கத்திரிக்காய் கோசுமல்லி செய்யத் தேவையான பொருள்கள்;

 1. கத்திரிக்காய் - 250 கிராம்.
 2. சின்ன வெங்காயம் – 100 கிராம்.
 3. புளிக்கரைசல் - சிறிதளவு.
 4. இஞ்சி - சிறிதளவு.
 5. மிளகாய் வத்தல் -3.
 6. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
 7. கடுகு,உளுந்தம் பருப்பு,கடலை பருப்பு - சிறிதளவு.
 8. நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்.
 9. உருளை கிழங்கு 2.
 10. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

 

கத்திரிக்காய் கோசுமல்லி செய்முறை ;-

 1. ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 2. 2 உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
 3. 250 கிராம் கத்திரிக்காயை எடுத்து சுத்தம் செய்து  கத்திரிக்காயின் நான்கு புறமும் லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். 
 4. அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 5. சுத்தம் செய்த கத்திரிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
 6. வேக வைத்த பின்னர் கத்திரிக்காயின் தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்துக்கொண்டு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சிறிதளவு சேர்த்து தேவையான அளவு  ஊற்றி கலந்து விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 7. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
 8. நன்கு காய்ந்த உடன்  நல்லெண்ணெய் 5 ஸ்பூன் ஊற்றவும்.
 9. எண்ணெய்யை சூடு படுத்திக் கொள்ளவும்.
 10. சிறிதளவு கடலை பருப்பு,உளுந்தம் பருப்பு,கடுகு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
 11. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 100 கிராம்,கறிவேப்பிலை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
 12. நறுக்கிய இஞ்சி சிறிதளவு மற்றும் மிளகாய் வத்தல் மூன்றை எடுத்து இரண்டாக வெட்டி போட்டு வதக்கவும்.
 13. இதனுடன் மசித்து வைத்துள்ள கத்திரிக்காய் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
 14. மசித்து வைத்துள்ள 2 உருளை கிழங்கை போட்டு கலந்து விடவும்.
 15. நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி விடவும்.
 16. அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 17. சுவையான கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!