முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கேரட் லட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

கேரட் லட்டு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. கேரட் - 1/2 கிலோ.
  2. சர்க்கரை - 1/2 கப்.
  3. முந்திரி பருப்பு – 10.
  4. திராட்சை - 5.
  5. நெய் - 200 கிராம்.
  6. ஏலக்காய் - 4.

Method: 

கேரட் லட்டு செய்முறை:-

  1. 1/2 கிலோ கேரட்டை துருவி ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்
  2. 4 ஏலக்காய் மற்றும்  ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து அதை மிக்சியில் போட்டு  நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும் கொள்ளவும்.
  3. அடுப்பில் கிடாய் வைத்து நெய் ஊற்றவும்.
  4. நெய் சூடானவுடன் 5 திராட்சை மற்றும் 10 முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  5. வறுத்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. மீதமுள்ள நெயில் துருவி வைத்துள்ள கேரட்டை போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
  7. முடி போட்டு முடி குறைவான தணலில் 2 நிமிடம் வேக விடவும்.
  8. ஒரு கப் சர்க்கரையை போட்டு அடிபிடிக்காமல் கிண்டி விடவும்.
  9. தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் 2 நிமிடம் கிண்டி விடவும்.
  10. மிக்சியில்அரைத்து வைத்துள்ள ஏலக்காய்யை பொடியை போட்டு கிண்டி விடவும்.
  11. வறுத்து வைத்துள்ள திராட்சை மற்றும் முந்திரிப்பருப்பை போட்டு கலந்து விடவும்.
  12. இப்போது லட்டு செய்யும் பதத்திற்கு வந்துவிட்டது.இதை ஒரு தட்டில் எடுத்து வைத்து, ஒரு மணி நேரம் ஆற விடவும்.
  13. நன்கு ஆரிய உடன் லட்டுக்கு பிடிப்பது போல் பிடித்து தட்டில் வைக்கவும்.
  14. சுவையான கேரட் லட்டு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்