Idhayam Matrimony
முகப்பு

சாமை அரிசி பாயாசம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சாமை அரிசி பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சாமை அரிசி - 150 கிராம்.
  2. பாசிபருப்பு - 100 கிராம்.
  3. வெல்லம் - 300 கிராம்.
  4. நெய் - 2 ஸ்பூன்.
  5. முந்திரி பருப்பு - 10.
  6. திராட்சை - 10.
  7. பொடி செய்த ஏலக்காய் - 5.
  8. உப்பு - 1 சிட்டிகை.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கர் வைத்து ஒரு கப் பாசி பருப்பை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுக்கவும்.
  2. அடுப்பில் கிடாய் வைத்து 2  ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு  மற்றும் 10 திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்,வறுத்த முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கர் வைத்து 5 கப் தண்ணீர் ஊற்றி அதில் 2 மணி நேரம் ஊற வைத்த  150 கிராம் சாமை அரிசி மற்றும் வறுத்த 100 கிராம்  பாசிபருப்பை போட்டு கலந்து விட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.
  4. குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் சாமை அரிசி நன்கு வெந்துள்ளது,அதை கலந்து விட்டு மீண்டும் லேசாக சூடுபடுத்திக்  கொள்ளவும் 
  5. இதில் 300 கிராம் வெல்லம் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு  குறைவான தணலில் அடிபிடிக்காமல் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  6. இதனுடன் பொடி செய்த ஏலக்காய் 5 மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து விடவும்.
  7. வறுத்த முந்திரி பருப்பு  மற்றும் திராட்சையை போட்டு கலந்து விடவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான பாசிபருப்பு பாயாசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago