முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் டிக்கா மசாலா

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

சிக்கன் டிக்கா மசாலா செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - முக்கால் கிலோ.
  2. தயிர் - 1/2 கப்.
  3. எழுமிச்சம்பழம் - 1/2 ஸ்பூன். 
  4. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
  5. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்.
  6. காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  7. கரம் மசாலா தூள் -  2 ஸ்பூன்.
  8. மல்லி தூள் - 1 ஸ்பூன்.
  9. பொடியாக நறுக்கிய பூண்டு - 9 பல்.
  10. பொடியாக நறுக்கிய இஞ்சி -2 துண்டுகள்.
  11. எண்ணெய் - சிறிதளவு.
  12. பட்டர் -50 கிராம்.
  13. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -3.
  14. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  15. தக்காளி ப்யூரி  - 2 ஸ்பூன்.
  16. கெட்டி பால் 1 கப்.
  17. நாட்டு சர்க்கரை -1 ஸ்பூன்.
  18. மல்லி இலை - சிறிதளவு.
  19. உப்பு -தேவையான - அளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ போன்லெஸ் சிக்கன் எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தயிர் 1/2 கப், எழுமிச்சம்பழசாறு 1/2 ஸ்பூன் ,மஞ்சள் தூள் 1/2  ஸ்பூன்,சீரகத்தூள் 1/2 ஸ்பூன்,காஷ்மீரி மிளகாய் தூள் 2 ஸ்பூன்,கரம் மசாலா ஒரு ஸ்பூன்,மல்லி தூள் 1 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பூண்டு 4 பல்,பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு 15 நிமிடங்கள் சிக்கனை ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்யை  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  போட்டு பொரிக்கவும்.
  5. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 50 கிராம் பட்டர் போடவும்.
  7. பட்டர் சூடானவுடன் பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயத்தை நன்றாக போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு  இஞ்சி துண்டு,பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்,2 ஸ்பூன் தக்காளி ப்யூரி,கெட்டி பால் ஒரு கப்,நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன், மல்லி இலை சிறிதளவு மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டுநன்றாக கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான சிக்கன் டிக்கா மசாலா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago