எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேஷன் கடைகளில் சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய்யை (பாமாயில்) மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, பாமாயிலை மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000படி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60,000 டன் துவரம் பருப்பு, 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயிலை எந்தவித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


