எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சிக்கன் மசாலா
Cooking time in minutes:
30
Ingredients:
சிக்கன் மசாலா செய்யத் தேவையான பொருள்கள்;
- எலும்பு இல்லாத சிக்கன் - 1/2 கிலோ.
- பட்டை 2 துண்டு.
- ஏலக்காய் - 7.
- கிராம்பு -7.
- கசகசா - 3 ஸ்பூன்.
- மல்லி தூள் 1/2 ஸ்பூன்.
- மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்.
- ஆரஞ்சு சிகப்பு கலர் பொடி - 3 சிட்டிகை.
- சோம்பு - 1 ஸ்பூன்.
- பூண்டு - 7 பல்.
- பெரியவெங்காயம் -1.
- இஞ்சி -1 துண்டு.
- தயிர் – 100 மில்லி.
- தேங்காய் துருவியது -3 ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- மிளகாய் தூள் 1 ஸ்பூன்.
- சீரகத்தூள் 1 ஸ்பூன்.
- எண்ணெய் -50 மில்லி.
- மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்.
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ எலும்பு இல்லாத சிக்கனை போடவும்.
- இதனுடன் தயிர் 100 மில்லி,ஆரஞ்சு சிகப்பு கலர் பொடி 3 சிட்டிகை, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விட்டு ஒரு மணி நேரம் உற வைக்க வேண்டும்.
- மிஸ்சி ஜாரில் ஏலக்காய் 7,பட்டை 2 துண்டு,தேங்காய் துருவியது 3 ஸ்பூன்,கசகசா 3 ஸ்பூன்,மிளகாய் தூள் 1 ஸ்பூன்,சீரகத்தூள் 1 ஸ்பூன்,இஞ்சி 1 துண்டு,பூண்டு 7 பல் போட்டு,சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 50 மில்லி எண்ணெய் ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் சோம்பு 1 ஸ்பூன்,நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும்.
- மிக்சியில் அரைத்து வைத்த மசாலா கலவையை போட்டு கிளறவும்.
- மிளகுத்தூள் 1/4 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு மூடி போட்டு மூடி 10 நிமிடம் வேக விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சிக்கன் மசாலா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


