முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் மோமோஸ்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

சிக்கன் மோமோஸ் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. சிக்கன் - 200 கிராம் (எலும்பு இல்லாத கறி ).
  2. பச்சைமிளகாய் - 2.
  3. வெங்காயம் - 2.
  4. இஞ்சி பூண்டு விழுது  - 1 ஸ்பூன்.
  5. சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்.
  6. கேரட் - 1.
  7. மிளகாய் தூள் - 5 கிராம்.
  8. உப்பு - தேவையான அளவு.
  9. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  10. மஞ்சள் தூள் -5 கிராம்.
  11. மைதா - 100 கிராம்.
  12. மிளகுத்தூள் – 5 கிராம்.
  13. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்.
Method: 

 

செய்முறை ; 

  1. மிஸ்சி ஜாரில் சுத்தம் செய்த 200 கிராம் சிக்கனை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 100 கிராம் மைதா மாவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல மாவை பிசைந்து கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  4. எண்ணெய் சூடானவுடன்,ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது  போட்டு வதக்கவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 2 வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  6. பொடியாக நறுக்கிய ஒரு கேரட், மற்றும் அரைத்து வைத்துள்ள 200 கிராம் சிக்கனை போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் மிளகுத்தூள்  5 கிராம்,மிளகாய் தூள்  5 கிராம், மஞ்சள் தூள் 5 கிராம், சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்,தக்காளி சாஸ் 1 ஸ்பூன்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  8. நன்றாக வதங்கி விட்டது,இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. பிசைந்து வைத்துள்ள மைதாமாவை பூரிக்கு தட்டுவது போல தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  10. தயார் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை மைதாமாவின் நடுவில் வைத்து அனைத்து ஓரங்களையும் சேர்த்து மேல் உள்ள சிறிது மாவை எடுத்து விட வேண்டும்.
  11. இதே போல் அணைத்து மாவையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  12. அடுப்பில் கடாய் வைத்து 500 மில்லி எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  13. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
  14. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  15. சுவையான சிக்கன் மோமோஸ் ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago