எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சில்லி சிக்கன்
Cooking time in minutes:
20
Ingredients:
சில்லி சிக்கன் செய்யத் தேவையான பொருள்கள்;
- பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்.
- எலுமிச்சம் பழம் -1.
- முட்டை - 1.
- கடலை மாவு - 2 ஸ்பூன்.
- அரிசி மாவு - 1 ஸ்பூன்.
- மிளகுத்தூள் – சிறிதளவு.
- வர மிளகாய் தூள் – சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
- ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்.
- கடுகு - சிறிதளவு.
- காஞ்ச மிளகாய்- 2.
- பொடியாக நறுக்கிய பூண்டு 2 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் 1 ஸ்பூன்.
- மல்லி தூள் 1 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
- சீரகம் - சிறிதளவு.
- வெங்காயம்,கேரட்,இலைக்கோசு
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் 100 கிராம், எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன்,ஒரு ஸ்பூன் அரிசி மாவு, மிளகுத்தூள் சிறிதளவு, வர மிளகாய் தூள் சிறிதளவு, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி,இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- தொடர்ந்து குறைவான தணலில் 5 நிமிடங்கள் திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- நன்றாக பொரிந்து விட்டது, அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் கடுகு சிறிதளவு, சீரகம் சிறிதளவு,கறிவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய காஞ்ச மிளகாய் 2, பொடியாக நறுக்கிய பூண்டு 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 4 ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லி தூள் 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் 1 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு சிறிதளவு, தேவையான அளவு உப்பு போட்டு, பொரித்து வைத்துள்ள சிக்கனை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விட்டு குறைவான தணலில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெங்காயம்,கேரட்,இலைக்கோசு சிறிதளவு வைத்து பரிமாறவும்.
- சுவையான சில்லி சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


