எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தக்காளி உருளைக்கிழங்கு
Cooking time in minutes:
20
Ingredients:
தக்காளி உருளைக்கிழங்கு செய்யத் தேவையான பொருள்கள்;
- உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
- சீரகம் - 1/2 ஸ்பூன்.
- மல்லி - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு.
- மிளகாய் வத்தல் - 3.
- மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
- மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
- பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 4.
- கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்.
- மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு .
Method:
செய்முறை ;
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1/2 கிலோ உருளை கிழங்கை போட்டு 2 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் வேக வைத்த உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி உருளை கிழங்கின் தோலை உரித்து நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மல்லி, பொடியா நறுக்கிய 3 பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியா நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,3 மிளகாய் வத்தல் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் பொடியா நறுக்கிய 4 தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- வேக வைத்து நறுக்கி தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
- கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தியை போட்டு கிளறிவிடவும்.
- சிறிதளவு மல்லி இலையை போட்டு கிளறிவிடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான தக்காளி உருளைக்கிழங்கு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


