Idhayam Matrimony
முகப்பு

மலாய் லட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

மலாய் லட்டு செய்யத் தேவையான பொருட்கள். 

  1. பால் - 1/2 லிட்டர்.
  2. பால் பவுடர் - 150 கிராம். 
  3. துருவிய தேங்காய் – 1.
  4. சர்க்கரை - 100 கிராம்.
  5. ஏலக்காய் - 5
  6. வெண்ணிலா எசன்ஸ் - 4 சொட்டு.
  7. எண்ணெய் – சிறிதளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் பால் ஊற்றவும்.
  2. பாலை குறைவான தணலில் நன்கு கொதிக்க வைத்து பால் கெட்டியாகும் வரை சுண்ட காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் 150 கிராம் பால் பவுடரை சிறிது சிறிதாக போட்டு குறைவான தணலில் கலந்து விடவும்.
  4. பால் நன்கு கெட்டியாக வந்த பின் ஒரு தேங்காய்யை துருவி போட்டு குறைவான தணலில் நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. இதனுடன் 100 கிராம் சர்க்கரை,மற்றும் 5 ஏலக்காயை நசுக்கி போட்டு குறைவான தணலில் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. இதனுடன் 4 சொட்டு வெண்ணிலா  எசன்சை ஊற்றி நன்றாக கிண்டி  கொண்டே இருக்கவும்.
  7. குறைவான தணலில் நன்றாக கலந்து விட்டு நன்கு பால் கெட்டியாக வந்த பின்னர் கலவையை ஒரு தட்டில் எடுத்து சிறிது நேரம் ஆற வைத்துக்கொள்ளவும்.
  8. கையில் சிறிதளவு எண்ணெய்யை தடவிக்கொண்டு சிறிதளவு கலவையை எடுத்து சிறிய லட்டு உருட்டுவது போல் உருட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  9. இதே போல் மீதம் உள்ள உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  10. சுவையான மலாய் லட்டு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago