எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
முட்டை சுக்கா
Cooking time in minutes:
30
Ingredients:
முட்டை சுக்கா செய்யத் தேவையான பொருட்கள்.
- முட்டை - 7.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
- பூண்டு - 11 பல்.
- தேங்காய் - 1/2 மூடி.
- பட்டை - 1.
- அன்னாசிபூ - 1.
- கிராம்பு - 2.
- மல்லி - ஒரு டீஸ்பூன்.
- கசகசா - ஒரு ஸ்பூன்.
- சீரகம் - ஒரு ஸ்பூன்.
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்.
- மிளகாய் வத்தல் - 15.
- கரம் மசாலா - ஒரு ஸ்பூன்.
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்.
- கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு.
- நெய் - 2 ஸ்பூன்.
- கடுகு - ஒரு ஸ்பூன்.
- கல் பாசி -சிறிதளவு.
- பச்சை மிளகாய் - 1.
- மிளகு தூள் - 1 ஸ்பூன்.
- புளிக்கரைசல் - ஒரு ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு -தேவையான - அளவு.
Method:
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 7 முட்டைகள் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு நன்றாக வேக வைத்து,முட்டை ஓடுகளை நீக்கி சுத்தம் செய்து முட்டையை பாதியாக அறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய 2 பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய 1/2 மூடி தேங்காயை போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு பட்டை,ஒரு அன்னாசிபூ,2 கிராம்பு,மல்லி ஒரு டீஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் கசகசா போட்டு வதக்கவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம்,மிளகாய் வத்தல் 15,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள மூடி தேங்காயை போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு உப்பை போட்டு,வேக வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு பொரிக்கவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா,ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,சிறிதளவு மல்லி இலை ஆகியவற்றை அணைத்து முட்டைகளிலும் படும் படி தூவி விடவும், குறைவான தணலில் திருப்பி திருப்பி போட்டு முட்டையை நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- நெய் சூடானவுடன்,ஒரு ஸ்பூன் கடுகு,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் சிறிதளவு கல் பாசி,ஒரு பச்சை மிளகாய், 4 பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இதனுடன் 10 கறிவேப்பிலை,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,ஒரு ஸ்பூன் புளிக்கரைசல் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும்.
- வேகவைத்த முட்டைகளை கடாயில் உள்ள மசாலா கலவையில் ஒவ்வொன்றாக வைக்கவும்.
- மசாலா கலவை முட்டையின் முன்னும் பின்னும் அனைத்து பகுதிகளிலும் படும் படி கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான முட்டை சுக்கா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


