எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
முட்டை வறுவல்
Cooking time in minutes:
20
Ingredients:
முட்டை வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;
- முட்டை - 7.
- கரம் மசால்தூள் - 4 டீஸ்பூன்.
- மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.
- எண்ணெய் - 6 டீஸ்பூன்.
- பெருங்காய தூள் - 1 சிட்டிகை.
- மிளகுதூள் - 1/2 டீஸ்பூன்.
- கான்பிளவர் மாவு - 2 டீஸ்பூன்.
- அரிசி மாவு - 1/2 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 7 முட்டைகளை போட்டு வேக வைத்து முட்டைஓடுகளை நீக்கி சுத்தம் செய்து இரண்டாக அறுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்,1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்,1 சிட்டிகை பெருங்காய தூள்,1/2 டீஸ்பூன் மிளகுதூள்,2 டீஸ்பூன் கான்பிளவர் மாவு,1/2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள எல்லா முட்டைகளிலும் இந்த மசாலா கலவையை தடவி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தவா வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி ஊற வைத்துள்ள முட்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- முட்டைகளை சுற்றி மேலும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்.
- நன்றாக பொரிந்து விட்டது இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான முட்டை வறுவல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


