எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
முருங்கைக்கீரை சாம்பார்
Cooking time in minutes:
20
Ingredients:
முருங்கைக்கீரை சாம்பார் செய்யத் தேவையான பொருள்கள்;
- முருங்கைக்கீரை - 1 கட்டு.
- துவரம் பருப்பு - 100 கிராம்.
- பொடியா நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்
- பொடியா நறுக்கிய தக்காளி - 1.
- பச்சை மிளகாய் - 2.
- எண்ணெய் - 3 டீஸ்பூன்.
- சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்.
- கடுகு,உளுந்து - 1/2 ஸ்பூன்.
- சீரகம் - 1/2 ஸ்பூன்.
- கறிவேப்பிலை - 10 இலைகள்.
- பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்.
- மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்.
- தனி மிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன்.
- புளி – சிறிதளவு.
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு கப் புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து 100 கிராம் துவரம் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக வைத்து இறக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் கடுகு,உளுந்து,1/2 ஸ்பூன் சீரகம்,10 கறிவேப்பிலை,சிறிதளவு மல்லி இலை,1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய 50 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பின்னர் 2 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் சுத்தம் செய்த ஒரு கட்டு முருங்கைக் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்,சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்,சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன், தனி மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன் போட்டு நன்றாக கிளறி விடவும்.
- தயார் செய்து வைத்துள்ள ஒரு கப் புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு குக்கரை மூடி 10 நிமிடம் கீரையை நன்றாக வேக வைக்கவும்.
- இதனுடன் குக்கரில் வேக வைத்த துவரம் பருப்யை போட்டு சாம்பாரை கொதிக்க வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
- சுவையான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


