எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வாழைத்தண்டு மோர் கூட்டு
Cooking time in minutes:
20
Ingredients:
வாழைத்தண்டு மோர் கூட்டு செய்யத் தேவையான பொருள்கள்;
- வாழைத்தண்டு - 1.
- மோர் - ஒரு கப்.
- தயிர் - ஒரு கப்.
- தேங்காய் - 2 சில்.
- பச்சை மிளகாய் - 7.
- கறிவேப்பில்லை - 20.
- எண்ணெய் - 2 ஸ்பூன்.
- சீரகம் - ஒரு டீஸ்பூன்.
- அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்.
- கடுகு,உளுந்து - 1 ஸ்பூன்.
- பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- மிக்சி ஜாரில் 2 தேங்காய் சில், 7 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் சிறிதளவு தயிர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிக்சியில் அரைத்தவற்றை போடவும்.
- இதனுடன் 1/2 கப் தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சுத்தம்செய்து நறுக்கிய ஒரு வாழைத்தண்டை போட்டு, இதனுடன் ஒரு கப் மோர் ஊற்றி கலந்து விட்டு கடாய்யை மூடி போட்டு மூடி 5 நிமிடம் வாழைத்தண்டை வேக வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து முடியை திறந்து தயார் செய்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தயிர் கலவையை ஊற்றி கலந்து விட்டு கடாய்யை மூடி போட்டு மூடி 5 நிமிடம் வாழைத்தண்டை வேக வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து முடியை திறந்து கலந்து விடவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு-உளுந்து, 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 20 கறிவேப்பிலை போட்டு நன்றாக வறுத்து வாழைத்தண்டு மோர் கூட்டு உள்ள கடாயில் ஊற்றி கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


