எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
KFC Style பிரைடு சிக்கன்
Cooking time in minutes:
30
Ingredients:
KFC Style பிரைடு சிக்கன் செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் 1.1/2 கிலோ.
- பொடி செய்த ஏலக்காய் தூள் - 1.1/2 ஸ்பூன் .
- மிளகு தூள் - 1.1/2 ஸ்பூன்.
- மிளகாய் தூள் – 5 ஸ்பூன்.
- முட்டை - 4.
- எலுமிச்சை பழம் – 3.
- இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்.
- பால் – 1.1/2 கப்.
- மைதா மாவு - 2 கப்.
- சோளமாவு - 1.1/2 கப்.
- தனியா தூள் - 1.1/2 ஸ்பூன்.
- பேக்கிங் பவுடர் - 1.1/2 ஸ்பூன்.
- பூண்டு விழுது - 1.1/2 ஸ்பூன் .
- ரீபைண்ட் ஆயில் - 1 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு .
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் 1.1/2 கப் பால் எடுத்துக்கொள்ளவும்.
- அதில் 3 எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாக கலந்து விட்டு,4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1.1/2 கிலோ சிக்கன், மிளகாய் தூள் 3 ஸ்பூன்,ஏலக்காய் பொடி 1.1/2 ஸ்பூன்,மிளகு தூள் 1.1/2 ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்,தேவையான அளவு உப்பு போட்டு தயார் செய்து வைத்துள்ள பால் மற்றும் முட்டை கலவையை ஊற்றி நன்றாக கலந்து விட்டு 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 2 கப், சோளமாவு 1.1/2 கப், தனியா தூள் 1.1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் 1.1/2 ஸ்பூன், பூண்டு விழுது 1.1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்..
- 3 மணி நேரம் ஆகி விட்டது, மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு உள்ள பாத்திரத்தில் ஒவ்வொன்றாக போட்டு மாவு கலவை சிக்கனில் அணைத்து பகுதிகளிலும் படும்படி புரட்டி எடுக்கவும்.
- இதே போல் அணைத்து சிக்கன் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 1 லிட்டர் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மாவு கலவையில் முக்கி எடுத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு குறைவான தணலில் வறுக்கவும்.
- திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்.
- நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- சுவையான KFC Style பிரைடு சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


