முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

KFC Style Popcorn Chicken

Cooking time in minutes: 
30
Ingredients: 

KFC Style Popcorn Chicken  செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் - 1/4 கிலோ,
  2. ஏலக்காய் தூள் - 1.1/2 ஸ்பூன் .
  3. எலுமிச்சை பழம் – 1.
  4. மிளகாய் தூள் – 2  ஸ்பூன்.
  5. முட்டை - 2.
  6. பால் – 1/2 கப்.
  7. மிளகு தூள்  - 1/2 ஸ்பூன்.
  8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்.
  9.  பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன்.
  10. பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் .
  11. சோளமாவு - 1/2 கப்.
  12. மைதா மாவு – 1/2 கப்.
  13. தனியா தூள்  - 1/2 ஸ்பூன்.
  14. ரீபைண்ட் ஆயில்  - 1/2  லிட்டர்.
  15. உப்பு -  தேவையான அளவு
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பால் எடுத்துக்கொள்ளவும்,அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், ஏலக்காய் பொடி 1.1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், மிளகு தூள் 1/2 ஸ்பூன், மற்றும் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, சுத்தம் செய்த 1/4 கிலோ சிக்கனை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு தயார் செய்து வைத்துள்ள. பால் மற்றும் எலுமிச்சம் பழதை பிழிந்து வைத்துள்ள கலவையை ஊற்றி கலந்துவிட்டு 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு ½, கப், சோளமாவு  1/2 கப், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், தனியா தூள் 1/2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் 1/4 ஸ்பூன், பூண்டு விழுது 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
  4. 3 மணி நேரம் ஆகி விட்டது, மசால் கலந்து ஊற வைத்த சிக்கனை எடுத்து சோளமாவு உள்ள பாத்திரத்தில் ஒவ்வொன்றாக போட்டு மாவு கலவை சிக்கனில் அணைத்து பகுதிகளிலும் படும்படி புரட்டி எடுக்கவும், இதே போல் அணைத்து சிக்கன் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். 
  5. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் ரிபைன்ட் ஆயில்  ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் மாவு கலவையில் முக்கி எடுத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு குறைவான தணலில் வறுக்கவும்.
  6. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்,நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  7. சுவையான KFC Style Popcorn Chicken  ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago