முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நரம்பு சுண்டி இழுப்பதை தடுக்க எளிமையான டிப்ஸ்.

 

  1. நரம்பு சுண்டி இழுத்தல் என்பது ஒரு நோய் அல்ல,ஒருகுறைபாடுதான்.
  2. உடலில் நீர் சத்து குறைவாலும்,அதிக களைப்பு காரணமாகவும், ரத்த ஓட்டம் குறைவதாலும் வருகிறது.
  3. 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் வரும்.
  4. நீர் சத்து குறைவால் வரும், நீர்அருந்த சரியாகும்.
  5. கடினமான உடற்பயிற்சி மற்றும் தொடர் பயணத்தின் போது நமது உடலில் நீர் சத்து குறைய வாய்ப்புள்ளது,இதை உணர்ந்து உடலில் நீர்சத்தை அதிகப்படுத்தினால் இந்த குறைபாட்டை தவிர்க்கலாம்.
  6. சப்போட்டபழம் பேரிச்சம்பழம்,மாதுளம்பழம்,கிஸ்மிஸ்பழம்,முந்திரிபருப்பு,பாதம்பருப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு சாப்பிட்டு 1/2 டம்ளர் பால் அருந்த நரம்பு குறைபாடுகள் நீங்கும்.
  7. உளுந்தங்களியை தொடர்த்து சாப்பிட்டு வர உடலில் நீர் சத்து சமநிலைப்படும்,நரம்பு குறைபாடுகள் நீங்கும்.
  8. 40 வயதுக்கு மேல் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை  தவிர்த்து யோகாசன பயிற்சி செய்யலாம்.
  9. ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பின் அதை கூட்ட முயற்சி செய்ய வேண்டும்.
  10. அதிக புரத சத்து உள்ள உணவுகளை உண்ணவேண்டும்,மற்றும்தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
  11. குறிப்பாக இரவு உறங்கும் முன் சோம்பலை தவிர்த்து ஒரு டம்ளர் நீர் அருந்துவது  இதற்கு சரியான தீர்வாக அமைகிறது.
  12. உடலில் நீர்சத்தை அதிகப்படுத்தினால்,நரம்பு சுண்டி இழுத்தல் குறைபாடு நீங்கும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்