முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடல் பருமனை குறைப்பது எப்படி?

பரம்பரையாக வரும் உடல் பருமன் மற்றும் அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமன் என இரு வகை உடல் பருமன் உள்ளது.

அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை  குறைப்பது எளிது ஆனால், பரம்பரையாக வரும் உடல் பருமனை  குறைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.

உடல் பருமனை பயிற்சி மூலமாகவும்,உணவு கட்டுப்பாடு மூலமாகவும்,உள்முக மருந்துகள் உட்கொண்டும் குறைக்க முடியும்.

நம் உட்கொள்ளும் உணவில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.

அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை  உணவுகளை குறைத்து உண்பதாலும்  மற்றும்  உடற்பயிற்சிகளை  செய்வதாலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

பரம்பரையாக வரும் உடல் பருமனை  குறைப்பதற்கு உணவுகளை  குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன்  நடை பயிற்சி மற்றும் மெல்லோட்ட பயிற்சி களையும்  சேர்த்து  செய்தால் நல்ல பலன் தரும்,விரைவில் எடை குறையவும்  வாய்ப்புள்ளது.

உணவு கட்டுப்பாட்டுடன் மனக்கட்டுப்பாடும் இருந்தால் நொறுக்குத் தீனியை தவிர்த்து அதன் மூலம் உடல் எடை குறையும்.

தைராய்டு மற்றும் வேறு நோய்கள் காரணமாகவும்  உடல் பருமன் வரும்,மற்றும் பள்ளி ,கல்லூரி செல்லும் இள வயது உள்ளவர்களுக்கும் குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்,

உடல் எடை கூடுவதால் மேலும் பல நோய்கள்   வர வாய்ப்புள்ளது, எனவே மிக கவனமாக இருந்து உடல் எடையை குறைக்க வேண்டும்.

சித்த வைத்திய முறையில் மிக எளிமையான மருந்து உள்ளது.

100 மில்லி நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுடன் வெட்டி போடவும்,உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து போட்டு 50 மில்லி வரும்வரை நன்கு கொதிக்க வைத்து 21 நாட்கள் முதல்  45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர  உடல் எடை நன்கு குறையும்.

இதனுடன் உணவுகளை  குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன்  நடை பயிற்சி ,மெல்லோட்ட பயிற்சி  மற்றும் யோகாசன பயிற்சி களையும்  சேர்த்து  செய்தால் நல்ல பலன் தரும்.

கொள்ளு உடல் எடை குறைக்க  நல்ல மருந்தாக உள்ளது,இதை இரவில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வர நல்ல பலன் தரும்.

வயிறு மற்றும் தொடைப் பகுதியில்  கொழுப்பு மெதுவாகத்தான்  கரையும்,எனவே தொடர் முயற்சி தேவை. 

நின்று கொண்டு கைகளை உயர்த்தி பின் குனிந்து கால் கட்டை விரலை தொடும் பயிற்சி மூலமாக வயிற்று பகுதி கொழுப்பு குறையும்,இதை அமர்ந்து கொண்டும் செய்யலாம்,நல்ல பலன் தரும்.

பெண்களுக்கு கர்பப்பை பிரச்சனை இருந்தாலும் ,கர்பப்பையில் நீர் கட்டிகள் இருந்தாலும் உடல் எடை கூடும்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில்  ஓய்வடுக்க தவறினாலும் உடல் எடை கூடும்.

சரியான நேரத்தில் சரியான அளவு உண்ணாமல் இருந்தாலும்,அடுத்த வேளை அதிகமான அளவு உணவை எடுத்துக்கொள்வதாலும் உடல் எடை மிக எளிதாக கூடிவிடுகிறது.

நெடுநேரம் இரவில் கண் விழிப்பது அந்த நேரம் அதிகமாக உண்பது உடல் எடையை கூட்டும்.

அசைவ உணவுகளை உண்டு, பகலில் உறங்குவதையும்  தவிர்க்க வேண்டும்

முறையற்ற உணவு,முறையற்ற பழக்க வழக்கங்கள் முறையற்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி,  மற்றும் ஆழ்ந்த உறக்கம் உடல் எடையை குறைக்க உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis