முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இதய நோய் வராமல் தடுப்பது எப்படி?

  1. மனம் பலகீனமாக இருந்தாலும்,இரத்தஅழுத்த நோய் இருந்தாலும,அதிக கவலை மற்றும் அதிக சந்தோசம் ஏற்பட்டாலும் இருதய நோய் வர வாய்ப்புள்ளது.
  2. அதிக உணவு,அதிக மது மற்றும் தொடர் புகை பிடித்தலும் இருதய நோய் வர காரணமாக அமைகிறது.
  3. நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து வந்தால் இருதய நோய் வருவதை தடுக்க முடியும். 
  4. ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு நமக்கு ஏற்படக்கூடிய நோய்களை ஆரம்ப நிலையிலே  கண்டறிந்து சரியான மருத்துவ முறையை பின்பற்றி நோயில்  இருந்து  மீள வேண்டும்.
  5. தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம்  இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
  6. இரத்த பரிசோதனை மூலம் உடலில் உள்ள அதிக கொழுப்பை கண்டறிந்து அதனை குறைப்பதன் மூலம் இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
  7. உடலில் அதிக கழிவு  மற்றும் அதிக கொழுப்பு சேர்வதை தவிர்க்க வேண்டும்.
  8. சித்த மருத்துவத்தில் இருதய நோய் வருவதை தடுக்க மருத்துவ முறைகள் உள்ளன.
  9. காலை வெறும் வயிற்றில்,1/2 கிளாஸ்  நீரில் 5 கிராம் இஞ்சியை லேசாக இடித்து வைத்துக்கொண்டு ,1/2எலுமிச்சம் பழச்சாறு,மற்றும் 3 ஸ்பூன் தேன்  கலந்து மேலும் 1/2 கிளாஸ் அளவு நீர் கலந்து ஒருநாள் விட்டு குடித்து வர  வேண்டும்,
  10. குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இதை அருந்த நல்ல பலன் கிடைக்கும்,தினமும் அருந்தினால் அல்சர் தொந்தரவு வர வாய்ப்புள்ளது.
  11. இந்த மருத்துவ முறை இருதய அடைப்பை சரிசெய்து, இருதயத்தை பலப்படுத்தும்.
  12. இரவு படுக்கும் முன் 50 கிராம் பசும்பாலில்,5 வெள்ளை பூண்டை லேசாக இடித்து போட்டு நன்கு கொதிக்க வைத்து சிறிதளவு பணங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து கெட்டியாக வந்த பின் சாப்பிட வேண்டும்.
  13. வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரைந்து இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.
  14. இந்த 2 மருத்துவ முறையில் ஓன்றை மட்டும் பயன்படுத்துவது நல்ல பலனை தரும்,
  15. 2 மருத்துவ முறையையும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.
  16. 40 வயதிற்கு மேல் நாம் அனைவரும் இருதயத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,தீய பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
  17. சித்த மருத்துவ மருத்துவ முறைகளை பின்பற்றி மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து  விட்டால் இருதய நோய் வருவதை தடுக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்