முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில நாட்கள் ஜெயிப்பீர்கள்; சில நாட்கள் தோற்பீர்கள்: தோல்விக்குப்பின் நடால் பேட்டி

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரிஸ் : விளையாட்டில் சில நாள்களில் நீங்கள் ஜெயிப்பீர்கள், சில நாள்களில் தோற்பீர்கள் என பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து நடால் கூறியுள்ளார்.

ஜோகோவிச்...

பாரிஸ் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நெ.1 வீரரான ஜோகோவிச், 3-6, 6-3, 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆட்டம் நான்கு மணி நேரம் 22 நிமிடம் நடைபெற்றது. 

ஜெயிப்பீர்கள்...

தோல்வி பற்றி நடால் கூறியதாவது., இதுதான் விளையாட்டு. சில நாள்களில் நீங்கள் ஜெயிப்பீர்கள், சில நாள்களில் தோற்பீர்கள். என்னுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த முயன்றேன்.3-வது செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது செட் பாயிண்ட் கிடைத்தது. அப்போது எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். தவறுகளால் அந்த செட்டை இழந்தேன். 

அமையவில்லை... 

சூழலை நன்றாகப் பயன்படுத்தி ஜோகோவிச் ஜெயித்தார். நான் எட்டு டபுள் ஃபால்டுகளைச் செய்தேன். நீங்கள் வெற்றி பெற விரும்பினால் அதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது. எனக்கு சிறந்த நாளாக அமையவில்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து