முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 22 ல் ரிலிசாகும் ஹார்ட் பீட் சீசன்-2

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      சினிமா
Heartbeat-Season-2 2025-05-

Source: provided

ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளார்.ஜியோ ஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.. அதில் யோகலட்சுமி கலந்து கொண்டு பேசுகையில், ’ஹார்ட் பீட்’ சீசன் 2 ன் வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ’ஹார்ட்பீட் சீசன் 2’ பல புது கதாபாத்திரங்கள், தீர்க்கப்படாத புதிர்கள் மற்றும் புதிய கதைக்களத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து