முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா-எம்.ஜி.ஆர்.-நினைவிடங்களில் ஜெயலலிதா அஞ்சலி

சனிக்கிழமை, 14 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, 15 - மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் திருவுருவச் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி 205 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை 4.10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க. தலைம கழகத்திற்கு ஜெயலலிதா வந்தார். அங்குள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஸ்பென்ஸர் பிளாசா எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதா மாலை அணிவித்தார்.

முன்னதாக அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், மகளிர் அணி கோகுல இந்திரா, பா.வளர்மதி, சுலோசனா சம்பத், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார், வி.சோமசுந்தரம், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், பொன்னையன், சோழன் சித.பழனிசாமி, வி.பி.கலைராஜன், வாலாஜாபாத் பி.கணேசன், வெற்றிவேல், தென்சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன், குமரகுரு, மோகன், செ.கருப்பசாமி, எஸ்.பி.வேலுமணி, நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. சார்பில் வீட்டில் இருந்து வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony