முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செல்ஃபிசைடு மோகம்

தொடர்ச்சியாக செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு நண்பர்களிடம் எப்போது பார்த்தாலும் கருத்து கேட்பது. செல்ஃபிசைடு என அழைக்கப்படுகிறது.கடந்த 2 மாதங்களில் மூன்று பெண்கள் செல்ஃபிசைடால் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, செல்ஃபியும் கூட ஆபத்துதான்.

புதிய கேமரா

கூகுள் க்ளிப்ஸ் என்ற தானியங்கி கேமராவில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும். இந்த ஸ்மார்ட் கேமரா தான் இருக்கும் இடத்திலேயே எந்த விதமான மனித தலையீடும் இல்லாமல் புகைப்படங்களை எடுக்குமாம். இது 130 டிகிரி கோணத்தில் உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.

பெண்களை விட ஆண்கள் நிறக்குருடர்கள்

இந்த உலகை வண்ண மயமாகவும், அதன் 8 பரிமாணங்களுடனும் காணும் காட்சிதான் உள்ளத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் அறிவியல் உள்ளத்தை பார்க்காது. உண்மையை மட்டும்தான். அப்படி பார்த்த போது ஒரு ஆச்சரியப்படும் செய்தி தெரியவந்தது. அது என்னவென்றால் பெண்களை காட்டிலும் ஆண்கள் சற்றே நிறக்குருடர்கள் என்பதுதான் அது. அதாவது பெண்களை காட்டிலும் நிறங்களை உணர்ந்து கொள்வதில் ஆண்கள் சற்று குறைச்சல்தான். இதற்கு அவர்களது மரபணுவில் காணப்படும் எக்ஸ் குரோமோசோம்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது, பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் ஒன்றின் குறைபாட்டை மற்றது சரி செய்து விடுமாம். ஆனால் பாவம் ஆண்களுக்கு இருக்கும் ஒரு எக்ஸ் குரோமோசோமும் மக்கர் பண்ணினால், உலகம் கருப்பு  வெள்ளையாகத்தான் தெரியுமாம். என்ன கொடுமை சார் இது..

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

பீட்சா எப்படி வந்தது

இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் பீட்சாவின் கதை தெரியுமா.. 1889ம் ஆண்டில், அப்போதைய இத்தாலி ராணியான மார்கரிட்டா மற்றும் ராஜாவான முதலாம் ராக் உம்பர்டோ ஆகியோர் நேப்பிள் பகுதியில் நகர்வலம் சென்றனர். அப்போது, அந்நகர ஏழைகள் விரும்பி சாப்பிட்டு வந்த தட்டை ரொட்டியை, ராணி சுவைத்து பார்த்தார். உடனே, தட்டை ரொட்டியின் ருசிக்கு மயங்கிய ராணி அதன் ரசிகையாகவே மாறிவிட்டார். உடனே தனது அரண்மனை சமையல்காரரை அழைத்து‘எனக்கு தட்டை ரொட்டியை தயார் செய்து தா’ என்று உத்தரவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரண்மனை சமையல்காரர் ரஃபேல் எஸ்போசிடா, தட்டை ரொட்டிக்கு புதிய பரிமாணம் அளித்தார். அதில், இத்தாலிய சிகப்பு தக்காளி, சீஸ், துளசி இலைகள் போன்றவற்றை ஒரு அளவான விகிதத்தில் சேர்த்து ராணியிடம் கொடுத்தார். அவர் தயாரித்த தட்டை ரொட்டியில், இத்தாலிய தேசிய கொடியின் வண்ணங்களான சிவப்பு (தக்காளி), வெள்ளை, பச்சை இருக்கும்படி பார்த்து கொண்டார். இன்று, நம்மிடையே பிரபலமாக உள்ள மார்கரிட்டா பீட்சா என்ற ரகம் தோன்றியது இப்படித்தான். பின்னர் 2 ஆம் உலகப் போரின் போது ராணுவ வீரர்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பீட்சா பல்வேறு வடிவங்களை எடுத்தது என்பது நீண்ட வரலாறு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago