முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கும்: முலாயம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

ஹமீர்புரா, பிப்.17 - உத்தரபிரதேசத்தில் தனது சமாஜ்வாடி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒருவேளை பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது மதவாத சக்திகள் தலை தூக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சியை தனது கட்சி ஆதரிக்கும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறினார். உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.  ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள வேளையில் மேலும் 4 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. இம்மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் என்ற இடத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்துகொண்டு சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  இந்த தேர்தலில் தங்களது சமாஜ்வாடி கட்சி அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

ஒருவேளை பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது மதவாத சக்திகள் தலைதூக்கி விடாமல் இருக்க, தங்களது கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதை சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர்கள் ஓட்டுப்போட கட்சி தொண்டர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை மக்களிடம் தொண்டர்கள் எடுத்துக்கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாநிலத்தில் குண்டர்கள் மற்றும் கூலிப்படைகளின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

குண்டர்கள் மற்றும் மாபியா கும்பலை சேர்ந்தவர்களை நீதியின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சமாஜ்வாடி கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் மாபியா கும்பலை சேர்ந்தவர்களும், குண்டர்களும் சிறையில் தள்ளப்படுவார்கள் என்றும் முலாயம் சிங் யாதவ் எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்