முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தூதரக தாக்குதலில் லெபனான் தீவிரவாத கும்பலுக்கு தொடர்பில்லையாம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம், பிப்.- 18 - இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்கள் குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லெபனான் தீவிரவாத குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சென்ற கார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் அதிகாரி படுகாயம் அடைந்தார்.  இந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்று லெபனான் தீவிரவாத கும்பல் மறுத்துள்ளது. லெபனான்  தீவிரவாத கும்பலான ஹெஸ்புல்லாவின் தலைவர்  ஹாசன் நஸ்ரல்லா இது குறித்து கூறுகையில்,  இந்தியாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். தங்களது குழுவின் தலைமை தளபதியாக விளங்கிய  இமாத் முக்மியா படுகொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆனதன் நினைவு தின பேரணியில் உரை நிகழ்த்திய அவர்  இந்த  தகவலை தெரிவித்துள்ளார். பெய்ரூட்டில் நடந்த இந்த பேரணி பற்றி செய்திகளை லெபனான் டி.வி. ஒன்று ஒளிபரப்பியது. 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தலைமை தளபதி கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்காமல் விட மாட்டோம் என்று அவர் இஸ்ரேலை எச்சரித்தார். இஸ்ரேல் ராணுவத்தினரோ அல்லது இஸ்ரேல் தூதரக அதிகாரிகளோ தங்களது இலக்கு அல்ல என்றும் ஒரு குறிப்பிட்ட இஸ்ரேலிய தலைவர்கள்தான் தங்களது இலக்கு என்றும் நஸ்ரல்லா கூறினார்.

நாங்கள் யாரை பழி வாங்கப்போகிறோம் என்பது அவர்களுக்கே தெரியும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தியாவில்  இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தீவிரவாதிகளோ அல்லது  லெபனான் தீவிரவாதிகளோதான் காரணமாக இருக்கலாம் என்று  இஸ்ரேல் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்