முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முதல்வராக ஷெட்டர் நாளை பதவி ஏற்கிறார்

புதன்கிழமை, 11 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை,11 - கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் சிக்கல் தீர்ந்தது. இதனைத்தொடர்ந்து அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை பதவி ஏற்றுக்கொள்கிறார். ஷெட்டர் அமைச்சரவையில் 2 துணைமுதல்வர்கள் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருக்கிறது. முதல்வராக இருந்த எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு அவர் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கிவிட்டது. அதேசமயத்தில் எடியூரப்பா ஆதரித்த சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டார். சதானந்தா கவுடா முதல்வராக பதவி ஏற்ற சுமார்ஹ 6 மாத காலத்திற்குள் அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 70 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்ததோடு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்தனர். இதனையொட்டி சதானந்த கவுடாவை டெல்லிக்கு வரும்படி கட்சி தலைவர் நிதீன் கட்காரி அழைத்தார். இதனையொட்டி டெல்லி சென்ற சதானந்த கவுடா,கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்தும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதையும் விளக்கினார். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதால் கட்சி மேலிடத்திற்கு வேறு வழியில்லாமல் சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டர். அதற்கு பதிலாக மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை சதானந்தாவுக்கு கொடுப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்தது.

மேலும் சதானந்த கவுடாவுக்கு பதிலாக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. முறைப்படி ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்றுக்காலையில் பெங்களூரில் நடக்கவிருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் சதானந்த கவுடா திடீரென்று போர்க்கொடி உயர்த்தினர். கட்சி மேலிடம் அளித்த உறுதிமொழிப்படி தமக்கு மாநில தலைவர் பதவி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிப்போம் என்றும் சதானந்தா கவுடா அறிவித்தார். இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் இருந்தது. இதனையொட்டி நேற்றுக்காலையில் கூடவிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் சதானந்த கவுடாவுடன் கட்சி மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி அவரை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெகதீஷ் ஷெட்டர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிகிறது. துணைமுதல்வர்களாக 2 பேர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பாவும் ஒருவராக இருக்கலாம் என்று உறுதியாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago