முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிலிருந்து வரும் முதலீட்டுக்கு அனுமதி

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஆக.- 2 - அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு இன்று அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை குறித்த மறுஆய்வினை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற ஒருவரோ அல்லது பாகிஸ்தானில் அமைந்துள்ள நிறுவனமோ அரசின் வழியாக இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆயினும், இராணுவம், விண்வெளி மற்றும் அணு ஆற்றல் துறைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. முன்னதாக, பாகிஸ்தானிலிருந்து வரும் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வங்கதேசத்தை சேர்ந்த தனி நபரோ அல்லது நிறுவனமோ அரசின் வழியாக இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தையும் அரசு செய்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்