எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 30 - ஜெயா டி.வி.யின் 14 வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் ஸ்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை சக்கரவர்த்தி பட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். விஸ்வநாதன்- ராமமூர்த்திக்கு விலை உயர்ந்த கார்களையும், 60 பொற்காசுகள் அடங்கிய பொற்கிழியையும் முதல்வர் ஜெயலலிதா பரிசாக வழங்கினார். மூத்த கலைஞர்களான பி.சுசிலா, பி.பி.சீனிவாஸ், ஏ.எல்.ராகவன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உட்பட கலைஞர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார். விழாவிற்கு வந்தவர்களை சுனில் வரவேற்றார். தமிழக அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 29.8.2012 அன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஜெயா டி.வி.யின் 14ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வாதன் டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை. இந்த இனிய விழாவின் கதாநாயகர்களான, மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே, டி.கே.ராமமூர்த்தி அவர்களே, திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களே, இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களே, இளையராஜா அவர்களே, ரஜினிகாந்த் அவர்களே, கமலஹாசன் அவர்களே வணக்கத்திற்குரிய பெரியோர்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனது அருமை உடன்பிறப்புகளே, உங்கள் எல்லோருக்கும் என் அன்பு கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் , டி.கே.ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே, ஜெயா டி.வி.யின் 14ஆம் ஆண்டு துவக்க விழாவிலே கலந்து கொண்டு பாராட்டி, கெளரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு முதலில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதினான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜெயா டி.வி.க்கு எனது வாழ்த்துகள். ஜெயா டி.வி.யின் ஜனனமே நெருப்பாற்றில் nullநீந்தி வந்த கதை. ஆங்கிலத்திலே க்ஷயயீவளைஅ லெ கசைந என்று சொல்வார்களே, அவ்வாறு தான் ஜெயா டி.வி. உதித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல் ரீதியாக எதிரிகள், மத்திய அரசின் தொல்லைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், வெளியேயும் எதிரிகள், உள்ளேயும் சதிகள் என அனைத்தையும் எதிர்கொண்டு, எதிர் நீnullச்சல் போட்டு இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது பாராட்டுதல்கள். இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால் தான் இசைக்கு மயங்காதார் எவருமில்லை இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டி.கே.ராமமூர்த்தி. இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீnullலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ஜெனோவா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ்.விஸ்வநாதன், பணம் திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை டி.கே.ராமமூர்த்தி அவர்களுடன் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை திரு. எம்.எஸ்.வி. அவர்களைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்கள் தான். முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்; மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் திரு. எம்.எஸ்.வி. அவர்கள். ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் திரு. எம்.எஸ்.வி. அவர்கள். தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்கள். மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான nullநீராருங் கடலுடுத்த என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் nullக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள். பெரியவர் டி.கே.ராமமூர்த்தி அவர்கள் மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தி அவர்களின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே.ராமமூர்த்தி அவர்கள். அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் அவர்கள் இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமன் அவர்களுக்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும். இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், ஆதி நாராயண ராவ், சலபதி ராவ், தக்ஷிணாமூர்த்தி, எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் nullநீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. நினைவில் இருந்து nullநீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். செளந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ஏ.எல்.ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் nullநீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பது தான் உண்மை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன். காற்று, நிலவு, nullமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950களிலும், 1960களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10வயது, 12வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்திருப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள். அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்திருக்கிறது. அந்த ராகம் தான் பிடித்திருக்கிறது. அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள். நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது. ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு, ஙுடீஷச்ஙுக்ஷ என்றால் என்ன என்றே தெரியாது. இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது. இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது. சொன்னது null தானா சொல் சொல் சொல் என் உயிரே என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை திருமதி டி.கே. பட்டம்மாள் அவர்கள் கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரி அவர்களிடம், உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, அவர்கள் உடனே வீணையை எடுத்து நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள். அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு திருப்பிவிட்டவர்கள். உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.
இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு. சங்கீதத்தைப் பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார். இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள். இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள். திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார். ஒரு முக்கியமான கட்டத்தில், பலே என்று ஒரு குரல் கேட்டது. அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை. லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி, இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான். தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை. இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் பொற்காலம் என்று சொல்வார்கள். பகீடீ எச்ங்க்ஷடீடூ அகிடீ ச்க் சிகீடீ எசீஙீசிஹஙூ என்பார்கள். அது போல, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது. இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய திரு. எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் திரு. டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும் என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. அவர்கள் கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். 1963ஆம் ஆண்டு விஸ்வநாதன் ராமமூர்த்திக்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு nullண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது. இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட திரு. விஸ்வநாதன் திரு. ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் nullங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, nullங்கள் இருவரும் nullண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜெயா டி.வி.யின் 14வது ஆண்டு துவக்க விழா நடைபெறும் இந்த நன்னாளில் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு சில அறிவிப்புகளை அந்த நிர்வாகத்தின் சார்பில் என்னை அறிவிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு சில அறிவிப்புகளை நான் இங்கே வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயா டி.வி.யில் பணிபுரியும் மாவட்ட நிருபர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தர நிர்ணயத்துடன் கூடிய ஊதிய உயர்வு வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 30 முதல் 40 விழுக்காடு வரையிலான ஊதிய உயர்வினை அவர்கள் அனைவரும் பெறுவார்கள். இந்த மாதம் முதல் அனைத்துப் பணியாளர்களுக்கும் மானிய விலையில் கேன்டீன் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதுவன்றி பணியாளர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு பாடப்பட வேண்டிய பாடல்களை தெரிந்தெடுத்து கொடுக்குமாறு ஜெயா டி.வி. நிர்வாகத்தினர் என்னை கேட்டுக் கொண்டனர். மெல்லிசை மன்னர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்து இருக்கிறார்கள். கர்ணன், பாச மலர், பாலும் பழமும், புதிய பறவை, பாசம், படகோட்டி, பாத காணிக்கை, ஆயிரத்தில் ஒருவன், வெண்ணிற ஆடை, புதையல், பணத் தோட்டம், பச்சை விளக்கு, சிவகங்கை சீமை, இதயக்கனி, போலீஸ்காரன் மகள் என அனைத்துப் படங்களிலும் எல்லா பாடல்களும் பிரபலமானவை. அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள். எதை எடுப்பது, எதை விடுவது என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் சிலவற்றை தெரிந்தெடுத்து கொடுத்து இருக்கிறேன். அவற்றை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்டு மகிழ உள்ளேன் என்பதைத் தெரிவித்து, அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!
என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
'தேசிங்குராஜா-2' திரைவிமர்சனம்
16 Jul 2025காவல் ஆணையராக இருக்கும் விமல், குற்றவாளிகளுக்கு துணை போவதோடு காவல்துறைக்கே களங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொல்லப்போவதாக சவால் விடுகிறார்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன '3 BHK' படக்குழு
16 Jul 2025சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.