முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு வந்தது காவிரி நீர்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

மேட்டூர், டிச. - 10 - சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி கர்நாடகா அரசு திறந்துவிட்ட காவிரி நீர் நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தாமதமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட்டது. இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா வருத்தமும் தெரிவித்தது. இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்ததா? இல்லையா? என்று சர்ச்சை இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலையே பிலிகுண்டுவை வந்தடைந்தது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்குத்தான் பிலிகுண்டுவுக்கு வந்து சேர்ந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் நேற்று காலையில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரியில் கர்நாடகா திறந்த நீரை ஆய்வு செய்வதற்காக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள் பிலிகுண்டுவில் முகாமிட்டிருந்தனர். கர்நாடகா திறந்த நீர், நேற்று முதல் தொடர்ச்சியாக வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்