முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியஅரசு தந்தநிதியை, குஜராத்அரசு தவறாகப் பயன்படுத்தியுள்ளது

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

காந்திநகர், டிச.- 15 - மத்திய அரசு தந்த நிதியை வியாபாரிகளுக்குக் கொடுத்து விட்டு, சாதாரண மனிதனை, குஜராத் மாநில அர சு தவிக்க விட்டுள்ளது.  இதன் மூலம் மத்திய நிதியை  தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்று குஜராத் மாநில அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: குஜராத் மாநிலத்துக்கு பாஜக-தேசிய ஜனநாயக முன்னணி அரசை விட, ஐக்கிய முன்னணி அரசு 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவில்,  அதிக நிதி ஒதுக்கியுள்ளது. சில குறிப்பிட்ட புள்ளிகள் மற்றும் வியாபாரிகள்  இந்த நிதியைப் பயன்படுத்தியதால், சாதாரண மனிதன் பயனடையமுடியவில்லை. குஜராத் மாநிலத்துக்கு, 3128 மெகா வாட் மின்சாரத்தை மத்திய அரசு வழங்கியது. ஆனால் குஜராத் அரசு லாபமடைவதற்காக 800 மெகாவாட் மின்சாரத்தை விற்றுவிட்டது. இது, மின்சாரத் தேவைக்குக் காத்திருக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மின்சாரத்துக்காக காங்கிரஸ் போராடவில்லை. குஜராத் வளர்ச்சிக்காக காங்கிரஸ் அரசு பாடுபடுகிறது. நல்ல பல திட்டங்களை காங்கிரஸ் அரசு துவக்கியுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.  வளர்ச்சி என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி நரேந்கிர மோடி தலைமையிலான அரசு வழி நடத்துகிறது. பல்வேறு திட்டங்ககளுக்காக வழங்கப்பட்ட நிதியை குஜராத் அரசு சரியாக பயன்படுத்தவில்லை.  காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த மாநிலத்தில் ஆளும் அரசு வளர்ச்சிக்கான திட்டம் எதையும் வகுத்து சாதனை புரியவில்லை.  வேலையில்லா திண்டாட்டம் இங்கு அதிகமாக உள்ளது. சுமார் 20 லட்சம் பேர் வேலை இல்லாமல்  உள்ளனர். நலிவுற்ற பிரிவினருக்கு இந்த மாநில அரசு எதையும் செய்யவில்லை. இந்த மாநில அரசு ஊழல் பேர்வழிகளை பாதுகாத்து, அப்பாவி மனிதனை தண்டிக்கிறது என்று சோனியா காந்தி பேசினார். இதற்கிடையே, குஜராத்துக்கு,  மத்திய அரசுபோதிய நிதி எதையும் ஒதுக்கவில்லை என்றும் சோனியா காந்திக்கு, நரேந்திர மோடி  பதிலடி கொடுத்துள்ளார்.                                           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்