முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிஜித்தை மன்னிப்போம் - மறப்போம்: காங்., தலைவர்கள்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.29 - டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் எம்.பி. அபிஜித்தை மன்னித்து மறப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். 

டெல்லியில் கடந்த 16-ம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து டெல்லியில் மாணவிகள், இளம் பெண்கள் திரண்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். இது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் கருத்து தெரிவிக்கையில், டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சந்தோஷமாக முகங்களில் வர்ணத்தை பூசி இருந்தனர். அவர்கள் மாணவிகளா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். உடனே தாம் கூறியதற்கு அபிஜித் மன்னிப்பு கேட்டார். 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில் அபிஜித் ஒரு எம்.பி.யாக இருக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனாகவும் இருக்கிறார். மேலும் தாம் கூறிய கருத்து யாரையும் புண்படும்படி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதனால் அவர் கூறியதை மன்னித்து மறப்போம் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அபிஜித் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு அவரும் மன்னிப்போம் மறப்போம் என்று அதே கருத்தை கூறினார். தன்னுடைய தவறை அபிஜித்தே உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார் என்றும் ஆல்வி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago