முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொச்சி வெறறி: பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஜன. 17 - இங்கிலாந்திற்கு எதிராக கொச்சியில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டி யில் இந்திய அணி வெற்றி பெற்றதற் காக கேப்டன் தோனி பந்து வீச்சாளர்க ளை பாராட்டினார். கொச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந் து அணிக்கு எதிரான மிகப் பெரிய வெ ற்றிகளில் ஒன்றாகும். 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்னை எடுத்தது. 

இந்திய அணி தரப்பில், கேப்டன் தோ னி அதிகபட்சமாக 72 ரன்னும், ஜடே ஜா 61 ரன்னும் எடுத்தனர். தவிர, விரா  ட் கோக்லி 37 ரன்னும், யுவராஜ் சிங் 32 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணி தரப்பில் பீட்டர்சன் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். தவிர ஜோ ரூட் 36 ரன் எடுத்தார். 

இந்திய அணி சார்பில், வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். தவிர, அஸ்வின் 2 விக்கெட்டும், ஷமி அகமது 1 விக்கெட்டும் எடு த்தனர். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் தோனி தெரிவித்ததா  வது - அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே ஆடி வருகிறோம். 

முன்னணி பந்து வீச்சாளர்கள் காயம் மற்றும் சில காரணங்களால் ஆட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. 

அணியில் இடம் பெற்றுள்ள இளம் வே கப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வ ர் குமார் மற்றும் ஷமி அகமது இருவ ரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். 

அவர்களது பந்து வீச்சு திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரவீந்திர ஜடேஜா கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளராக ஜொலித்தார். 

அவரால் 20 அல்லது 30 ரன்கள் வரை தான் எடுக்க முடிந்தது. ஆனால் இந்த முறை மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து இருக்கிறார். 

அவரால் அதிரடியாக ஆடி சிக்சர்களை அடிக்க முடியும் என்று எங்கள் எல் லோருக்கும் தெரியும்.  அதற்குரிய திற மை அவருக்கு இருக்கிறது. ஜடேஜாவி ன் ஆட்டம் அபாரமாக இருந்தது. 

கொச்சி ஆடுகளத்தை நான் தவறாக கணித்து விட்டேன். பேட்டிங்கிற்கு முழுக்க சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். 

பிற்பகுதியில் இங்கிலாந்தும் சிறப்பாக பேட்டிங் செய்யும். சுழற் பந்து வீச்சா ளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது என்று நினைத்தேன். 

எனது கணிப்பு தவறாகிவிட்டது. சுழற் பந்து வீச்சாளர்களின் பந்து நன்றாக சுழ ன்று இங்கிலாந்து வீரர்களை திணற வைத்து விட்டது. 

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது, வேகப் பந்து வீச்சிற்கு ஆடுகள ம் உதவியாக இருந்தது. தொடக்க வீரர் கள் எளிதில் ஆட்டம் இழந்ததும், கோ க்லியும், யுவராஜ் சிங்கும் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது.           டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகள மாக இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 19 -ம் தேதி (சனிக்கிழமை) ராஞ்சியில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்