முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படம்: மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

கோலாலம்பூர், பிப். 2 ​ - விஸ்வரூபம் படத்தில் எந்த மதத்திற்கும் எதிராக எதுவும் இல்லை என்றும் அதனால் அதை மலேசியாவில் திரையிட அனுமதி அளிக்குமாறும் அந்நாட்டு அரசுக்கு இந்திய வம்சாவளி கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. 

கமலின் விஸ்வரூபம் மலேசியாவில் கடந்த 25 ம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் அங்கு அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை ரத்து செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்தில் எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் எந்த காட்சியும் இல்லை என்றும், அதனால் அப்படத்தை வெளியிட அனுமதி அளிக்குமாறும் அந்நாட்டு அரசுக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வேண்டுமென்றால் உள்துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் மற்றும் அவரது அமைச்சக அதிகாரிகளுக்காக விஸ்வரூபம் படத்தை திரையிடுகிறோம். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு அதில் இஸ்லாத்திற்கு எதிரான காட்சிகள் உள்ளதா என்று முடிவு செய்யட்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago