முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அதிபர் ஹாலன்டேவுக்கு சிறப்பான வரவேற்பு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.15 - இந்தியாவுக்கு வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டேவுக்கு புதுடெல்லியில் சிவப்பு கம்பள விரிப்புடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதிபர் ஹாலன்டேவுடன் உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது. 

புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு பிரான்காய்ஸ் செல்ல உள்ளார். அங்கு பெரும் தொழிலதிபர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்துகொள்ளார். அதற்கு முன்பு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர்களை பிரான்காய்ஸ் சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.50 ஆயிரம் கோடிக்கு போர் விமான கொள்முதல் செய்து கொள்ளும்படி பிரான்காய்ஸ் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. முக்கிய துறைகளில் இந்தியாவும் பிரான்ஸ் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்ந்தத்தை செயல்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளோம் என்று அதிபர் பிரான்காய்சுடன் வந்திருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பிரான்ஸ் நாட்டு அதிபராக பிரான்காய்ஸ் கடந்த மே மாதம் பதவி ஏற்றார். பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். உலக அளவில் பொருளாதாரத்தில் அதிவிரைவாக முன்னேறி வருவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில்தான் அதிபர் பிரான்காய்ஸ் புதுடெல்லி வந்துள்ளார் என்பது தெரிகிறது. இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம், தொழில், வர்த்தகம் உள்பட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago