முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,பிப்.16 - காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈத்காவுக்கு பிரிவினைவாதிகள் ஊர்வலமாக செல்வதை தடுக்கவே இந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் தாக்குதல் வழக்கில் தீவிரவாதி அப்சல் குரு கடந்த சனிக்கிழமை அன்று தூக்கிலிடப்பட்டான். அதனையொட்டி பிரிவினை வாதிகள் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க காஷ்மீர் பள்ளத்தாக்கில் அன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பதட்டத்துடனான அமைதி நிலவியது. பதட்டம் குறைந்ததால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பாக ஸ்ரீநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்தநிலையில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகரில் உள்ல ஈத்கா நினைவிடத்திற்கு ஊர்வலம் புறப்படும் என்று பிரிவினைவாத இயக்க தலைவர்களில் ஒருவரான கிலானி அறிவித்திருந்தார். இந்த ஊர்வலம் சென்றால் வன்முறை ஏற்படலாம் என்றும் ஊர்வலம் செல்லாமல் இருக்கவும் இந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி ஸ்ரீநகரில் ஒரு சில பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. இதனையொட்டி அங்கு போலீசார் விரைந்து சென்று கடைகளை அடைக்கச் செய்தனர். இருந்தபோதிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் மத்திய படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலம் செல்லாமல் இருக்க சாலைகளில் தடுப்புகளை சிவில் அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். இதற்கிடையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கலவரத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்