முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்கள் விஷயத்தில் ஈரானை மிஞ்ச விட மாட்டோம்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச். 16 - அணு ஆயுதங்கள் விஷயத்தில் ஈரானை மிஞ்ச விட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார். அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு அடுத்த வாரம் ஒபாமா செல்கிறார். இதையடுத்து இஸ்ரேல் டி.விக்கு ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது, 

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறது. இந்த திட்டம் முழுமையடைய ஓராண்டோ, ஈராண்டோ ஆகலாம். இந்த பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமரிடம் பேசி வருகிறேன். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கும் சக்தி அமெரிக்காவுக்கு இருக்கிறது. தூதரக ரீதியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் நல்லது. இல்லாவிட்டால் வேறு வழிகளில் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்