முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் - தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்?

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 19 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சி.பி.ஐ. சாட்சியாக மே மாதம் 6 ம் தேதி ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் சி.பி.ஐ. தரப்பு அரசு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மேலும் விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சி.பி.ஐ. அளித்தது. அதில் கருணாநிதியின் மனைவி தயாளுவின் பெயர் இடம் பெற்றுள்ளது. தயாளு அம்மாள் மே மாதம் 6 ம் தேதி சாட்சியமளிப்பார் என்றும் அதில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

ஆனால் தயாளு அம்மாள் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுவதால் சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பினாலும் அவர் ஆஜராவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பினால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்குக் கோரி தி.மு.க. தரப்பில் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago