முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 6: பஞ்சாப் கிங்ஸ் புனே வாரியர்சை வென்றது

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். 23 - ஐ.பி.எல். 6 போட்டியில் மொகாலியி ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட்வித் தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தர ப்பில், மந்தீப் சிங் மற்றும் மில்லர் இரு வரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக, வொக்ரா ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது, அசார் மெக்மூத், அவானா, கோனி ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப் பாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றி யது. இந்தப் போட்டியில் பந்து வீச்சு எடுபடவில்லை. 

ஐ.பி.எல். போட்டியின் 29 -வது லீக் ஆட்டம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய புனே வாரியர்ஸ் அணி 20 ஓவ ரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்னைக் குவித்தது. 

புனே அணி தரப்பில், கேப்டன் பிஞ்ச் அதிகபட்சமாக, 42 பந்தில் 64 ரன் எடுத் தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ச ர் அடக்கம். தவிர, உத்தப்பா 33 பந்தில் 37 ரன்னையும், யுவராஜ்சிங் 24 பந்தில் 34 ரன்னையும்,ஜே. ரைட் 10 பந்தில் 34 ரன்னையும் எடுத்தனர். 

பஞ்சாப் அணி சார்பில், அசார் மெக்மூ  த் 42 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, அவானா மற்றும் எம். எஸ். கோனி ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர். 

பஞ்சாப் அணி 186 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை புனே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பஞ் சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத் தது. 

பஞ்சாப் அணி தரப்பில், மில்லர் அதிக பட்சமாக, 41 பந்தில் 80 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக் சர் அடக்கம். 

மந்தீப் சிங் 58 பந்தில் 77 ரன்னை எடுத் தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவி ர, வொக்ரா 13 பந்தில் 22 ரன்னை எடுத் தார். 

புனே அணி சார்பில், புவனேஷ்வர் குமார், மெண்டிஸ் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத் தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக மில்லர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago