முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். 27 - ஐ.பி.எல். - 6 போட்டியில் சென்னையி ல் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர் ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சென்னை அணி தரப்பில், கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக மை க் ஹஸ்சே மற்றும் விஜய் இருவரும் நல்ல துவக்கத்தை அளித்தனர். 

பெளலிங்கின் போது, ஜே. பிராவோ மற்றும் எம்.சர்மா இருவரும் நன்கு பரந்து வீசி 4 முக்கிய விக்கெட்டைக் கைப் பற்றினர். அவர்களுக்கு ஆதரவாக அஸ் வின் பந்து வீசினார். 

ஐ.பி.எல். போட்டியின் 34 -வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்ப ட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்னை எடுத்தது. எஸ். தவான் அதி க பட்சமாக 45 பந்தில் 63 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடக்கம். தவிர, ஆஷிஸ் ரெட்டி 36 ரன்னையும், டேரன் சம்மி 19 ரன்னையும், அமித் மிஸ்ரா 15 ரன்னையும், தலைவன் சற்குணம் 10 ரன் னையும், எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், எம்.சர்மா 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். ஜே. பிராவோ 37 ரன்னைக் கொ டுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, அஸ்வின் 1 விக்கெட் எடுத்தார். 

சென்னை அணி 160 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஐத ராபாத் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்னை எடு த்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் சென் னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத ன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடை த்தது. 

சென்னை அணி தரப்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக, 37 பந்தில் 67 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். மைக் ஹஸ்சே 26 பந்தில் 45 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, விஜய் 18 ரன்னையும், ரெய்னா 16 ரன்னையும், ஜே. பிரா          வோ 7 ரன்னையும் எடுத்தனர். 

ஐதராபாத் அணி சார்பில், அமித் மிஸ் ரா 36 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, இஷாந்த் சர்மா மற்று ம் ஸ்டெயின் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்