முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ.க்கு ஒத்துழைப்பு தர உத்தரவு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

 

புது டெல்லி, ஆக. 8  - நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணையில் சி.பி.ஐ.க்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான முழுமையான ஆவணங்களை வழங்குவதில் மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் சி.பி.ஐ.யிடம் ஒத்துழைப்பதில்லை என்று மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒத்துழைப்பு தருகிறதா? இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மனுதாரரின் குற்றச்சாட்டை மறுத்து சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் அமரேந்தர் சரண் கூறுகையில், மத்திய அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறது. நாங்கள் ஆவணங்களைத்தான் கோரி வருகிறோம் என்றார். இதை தொடர்ந்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பும் தர வேண்டும் என்றும் சி.பி.ஐ. க்கு தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை எந்தவித தாமதமும் இன்றி உடனே வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்